ADDED : நவ 24, 2024 05:17 AM

மதுரை : பெங்களூருவில் தேசிய அளவிலான ஓபன் பிரிவு சிலம்பப் போட்டி நடந்தது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, பிற மாநிலங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரை அம்பிகை நாராயணன் மற்றும் போசா விளையாட்டு வளாக மாணவர்கள் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
ஒற்றை கம்பு பிரிவில் சூர்யா, சாதனா, குரு கார்த்திகேயன், யோகேஷ் வருண், சஞ்சய்ராஜன், கதிர்வேல் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். சிக்கிதரன், பரணிதரன், விமலேஷ் இரண்டாம் பரிசும் ஸ்ரீநாத், வர்ஷன் கார்த்தி, மிவிஷா, ரக் ஷிகா, கருப்பசாமி, துருவன்பாலா, சஸ்வந்த் 3ம் பரிசு வென்றனர்.
இரட்டை கம்பு பிரிவில் ஜெயசுதன், வர்ஷன்கார்த்தி முதல் பரிசும், தஸ்வந்த், ஜோவிஸ் சிபின் 2ம் பரிசும் வென்றனர். தொடுமுறை போட்டியில் சந்தோஷ், பிரதிஷ், பரணிதாரன், லித்திகா, செந்துாரன், பிரசன்னா முதல் பரிசும் மாமலைவாசன், ஸ்ரீராம் 2ம் பரிசும் பொன்னாபரணன், முத்துகவினன், கதிர்வேல், தஸ்வந்த் 3ம் பரிசும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வளாகத் தலைவர்கள் சுந்தரக்கண்ணன், சரவணன், ஜான் சந்திரமோகன், பயிற்சியாளர்கள் கவுரிசங்கர், கார்த்திகேயன் பாராட்டினர்.