ADDED : அக் 29, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கோவாவில் 24வது தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டி நடந்தது. மதுரை நாவலர் சோமசுந்தரம் பாரதியார் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷா 13 வயது பிரிவில் தமிழக அணி சார்பாக பங்கேற்றார்.
எஸ் 9 பிரிவு 50 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் தங்கம் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் வெள்ளி, 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப்பதக்கங்களை வென்றார். நீச்சல் சங்க ஸ்டாலின் ஆரோக்கியராஜ், கண்ணன், மாநகராட்சி நீச்சல்குள பயிற்சியாளர் விஜயகுமார் பாராட்டினர்.