ADDED : டிச 03, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் உன்னத் பாரத் அபியான் சார்பில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலையங்குளம் கிராம மக்கள், சாலையோர வியாபாரிகளுக்கு காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. காற்றுமாசை குறைக்க பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கல்லூரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஒருங்கிணைத்தார்.