ADDED : அக் 11, 2024 05:23 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் உலக அஞ்சல் தின விழா முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ரவிராஜ் ஹரிச்சந்திரா தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெப்பக்குளத்தில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடந்தது.
தபால் நிலையங்களின் துணை கண்காணிப்பாளர் (தலைமை) விஜயலட்சுமி, முனிச்சாலை போஸ்ட் மாஸ்டர் ராமகண்ணன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோட்ட அலுவலகம் சார்பில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டப்பட்டன.
