ADDED : டிச 25, 2025 06:23 AM
மதுரை: மதுரைக் கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில் 'இயற்பியலின் வேகம்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் வரவேற்றார்.
முதல்வர் சுரேஷ் கருத்தரங்கு முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லுாரி பேராசிரியர் மீனாட்சி சுந்தர் தொடக்க உரையாற்றினார். அவர் குவாண்டம் இயக்கவியல் குறித்து எளிமையான உதாரணங்களுடன் விளக்கினார். மைசூரு கல்லுாரி பேராசிரியர் பத்ம பிரசாத், 'நானோ பொருட்களில் குவாண்டம் இயக்கவியலின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் இணையவழியில் பேசினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார்.
பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், கவிதா, கவுரி, வெங்கடேசன் ஏற்பாடு செய்தனர். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

