/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய சிலம்பம், கராத்தே மதுரைக்கு பதக்கம்
/
தேசிய சிலம்பம், கராத்தே மதுரைக்கு பதக்கம்
ADDED : ஆக 12, 2025 05:37 AM

திருப்பரங்குன்றம் : மயிலாடுதுறையில் நடந்த தேசிய சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் மதுரை கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்.
சிலம்பம்: 8 வயது பிரிவில் சாய் தர்ஷன் 3ம் இடம், 9 வயது பிரிவில் அபானா 2ம் இடம், 10 வயது பிரிவில் தீபிகா முதலிடம், சங்கரநாராயணன் 3ம் இடம், 11 வயது பிரிவில் நிவர்த்தன் முதலிடம், ஸ்ரீ வர்ஷன் 3ம் இடம், 12 வயது பிரிவில் காஞ்சனாஸ்ரீ 3ம் இடம் வென்றனர்.
கராத்தே: 8 வயது பிரிவில் பிரகன்தேவ் 3ம் இடம், 11 வயது பிரிவில் விக்னேஷ், தன்யா 3ம் இடம், 11 வயது பிரிவில் சாய் மாதேஸ்வரன் முதலிடம், தமிழ்செல்வன் 3ம் இடம், 13 வயது பிரிவில் அபிமன்யு, ஜஸ்வந்த் ராகவ் 3ம் இடம் வென்றனர். பதக்கங்கள் வென்ற வீரர்களை கோஜூ காய் கராத்தே இந்திய தலைமை பயிற்சியாளர் கார்த்திக், மாவட்ட பயிற்சியாளர் முனிஸ்வரன் பாராட்டினார்.