UPDATED : நவ 16, 2026 06:03 PM
ADDED : நவ 16, 2026 06:00 PM

மதுரை: மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் மதுரை வேலம்மாள் நீச்சல் அகாடமி வீரர்கள் சாதனை படைத்தனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின நீச்சல் போட்டிகள் நடந்தன. இதில் மதுரை வேலம்மாள் நீச்சல் அகாடமி வீரர் சோலை அபிமன்யு பங்கேற்று 200 மீட்டர் ஐ.எம்., பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.) தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
மத்தியப் பிரதேசம் போபாலில் நடந்த 26வது சீனியர் பாரா நீச்சல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா வீரர் மகேஷ் பங்கேற்றார். இவர் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெள்ளி, 50 மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் மிக்ஸ்டு ரிலே பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். தலைமைப் பயிற்சியாளர் விஜயகுமார் பாராட்டினார்.
