/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உயிரி தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கு
/
உயிரி தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கு
ADDED : ஜன 10, 2025 05:21 AM
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பங்கள், பயோடெக்னாலஜி துறை, கல்லுாரி பயோடெக்னாலஜி துறை சார்பில் உயிரி தொழில்நுட்பவியலில் நீடித்த வளர்ச்சி குறித்த தேசிய கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது.
தலைவர் உமா தலைமை வகித்தார். முதல்நாளில் ஐதராபாத் செல்லுலார், மூலக்கூறுகள் உயிரியியல் மையத்தின் தங்கராஜ், கேரளா ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மைய அறிவியலாளர் கதிரேசன் கலந்துரையாடினர். நேற்று காமராஜ் பல்கலை மூலக்கூறுகள் பயாலஜி துறை பேராசிரியர் ரமேஷ், மீன் வளர்ப்பின் முக்கியத்துவம், பொருளாதாரம், புரோ பயோடிக்ஸ் குறித்து பேசினார். கெண்டை மீன் வளர்ச்சியில் நன்மையளிக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் மாறுதல்கள் குறித்து தெரிவித்தார்.
இது ஒரு நன்னீர் வாழ் உயிரினம். நீர் துாய்மையாக இருந்தால் மட்டுமே அது உட்கொள்ள தகுதியுடையது. மாசுபாடு உள்ள நீரால் மீனுக்கும், அதனை உட்கொள்வோருக்கும் ஏற்படும் நன்மை தீமைகளை ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விளக்கினார். கடல்சார் மீன்கள் வளர்ச்சி, விரால் மீன் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.
உணவு பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் தொடர்பாக மைசூர் உணவு பொருட்கள் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் எழில்வேந்தன் பேசினார். முதல்வர் பாண்டிராஜா, உதவி பேராசிரியர்கள் கார்த்திகேயன், ரேணுகாதேவி பங்கேற்றனர்.

