/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வே கோட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தின விழா
/
மதுரை ரயில்வே கோட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தின விழா
மதுரை ரயில்வே கோட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தின விழா
மதுரை ரயில்வே கோட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தின விழா
ADDED : அக் 31, 2024 02:47 AM
மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக். 31, தேசிய ஒருமைப்பாடு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மதுரையில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தை கோட்ட மேலாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ஊழியர்கள், சாரண சாரணியர், ரயில்வே பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் ஹரிக்குமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.