ADDED : மார் 23, 2026 07:04 AM

மதுரை: ஒடிசா புவனேஸ்வரில் 26 வது தேசிய இளையோர் மகளிர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. முதல் லீக் போட்டியில் தமிழக அணி 25 --- 10, 25 -- 8, 25 -- 14 செட்களில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது. 2வது லீக் போட்டியில் 25 -14,
25 -16, 25 - 19 செட்களில் கர்நாடக அணியையும் 3வது லீக் போட்டியில் மத்திய பிரதேச அணியை 25 - 12, 25 - 9, 25 - 14 செட்களில் வீழ்த்தியது. 4வது லீக் போட்டியில் தெலுங்கானா அணியை 25 - 15, 25 - 21, 25 - 9 செட்களிலும் 5வது லீக் போட்டியில் 25 - 6, 25 - 11, 25 - 11 செட்களில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது.
காலிறுதிப் போட்டியில் தமிழக அணி 25 -15, 23 - 25, 22 - 25, 19 - 25 செட்களில் குஜராத் அணியையும் அரையிறுதிப் போட்டியில் ஒடிசாவை 20 - 25, 25 -18, 23 - 25, 29 - 27, 15 - 5 செட்களில் வீழத்தி இறுதிப்போட்டிக்குள் தமிழக அணி நுழைந்தது. இதில் கேரள அணி 3 - 0 என்ற புள்ளிகளில் தமிழகத்தை வீழ்த்தியது. தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
அரியானா அணி 3ம் இடம், ஒடிசா அணி 4ம் இடம் பெற்றன. அணியின் சிறந்த வீராங்கனையாக அமெரிக்கன் கல்லுாரி மாணவி அபி தேர்வாகினார். மாணவி அபி, பயிற்சியாளர் தீபன் ராஜை தமிழ்நாடு வாலிபால் சங்க செயலாளர் மார்டின் சுதாகர், மதுரை மாவட்ட கழக செயலாளர் ராகவன் வாழ்த்தினர்.

