/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.6.50 கோடியில் நிலையூர் கால்வாய் சீரமைப்பு பணிகள்
/
ரூ.6.50 கோடியில் நிலையூர் கால்வாய் சீரமைப்பு பணிகள்
ரூ.6.50 கோடியில் நிலையூர் கால்வாய் சீரமைப்பு பணிகள்
ரூ.6.50 கோடியில் நிலையூர் கால்வாய் சீரமைப்பு பணிகள்
ADDED : மே 02, 2025 06:45 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களின் வரத்துக் கால்வாயான நிலையூர் கால்வாயை ரூ. 6.50 கோடியில் சீரமைக்கும் பணி துவங்கியது.
திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்கள், பெருங்குடி மற்றும் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்க்கு நிலையூர் கால்வாய் மூலம் வைகை அணை தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த கால்வாய்க்குள் 50 ஆண்டுகளாக விளாச்சேரி முதல் சந்திரா பாளையம் வரை பிளாஸ்டிக் உள்பட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவுகிறது.
விளாச்சேரியில் இருந்து பெருங்குடி வரையுள்ள நிலையூர் கால்வாயில் பல்வேறு இடங்களில் உயரம் குறைவாக உள்ளதால் அதிக தண்ணீர் வரும்போது, வெளியேறி குடியிருப்புகளை சூழ்கிறது.
இதனால் நிலையூர் கால்வாய்க்குள் ஆண்டு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது குறித்துதினமலர் நாளிதழில் பல செய்திகள் வெளியாகி உள்ளன. இதையடுத்து நீர்வளத் துறை சார்பில் நிலையூர் கால்வாயில் ரூ. 6.50 கோடியில் 5 கி.மீ.,க்கு மராமத்து பணிகள், சீரமைப்பு பணிகள் துவங்க சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது.
நீர்வளத்துறை பொறியாளர்கள் கூறுகையில், ''நிலையூர் கால்வாயில் விளாச்சேரி முதல் பெருங்குடி வரை வலுவிழந்த பகுதிகளிலும், அணை தண்ணீர் திறக்கும் காலங்களில் தண்ணீர் வெளியேறும் தாழ்வான பகுதிகளில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது.
கால்வாய்க்குள் குப்பை கொட்டுவதை தடுக்கபக்கவாட்டில் 8 அடிஉயரம் கம்பி வலை பொருத்தப்படும். சந்திராபாளையம், தேவி நகர், பெருங்குடியில் பழுதடைந்த தரை பாலங்களை அகற்றி புதிய தரைப்பாலங்கள் கட்டப்பட உள்ளது. சேதம் அடைந்துள்ள ஷட்டர்களும் சீரமைக்கப்பட உள்ளன, என்றனர்.