ADDED : நவ 20, 2025 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் என்.சி.சி., வீரர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 525 என்.சி.சி., வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கமாண்டிங் அதிகாரி கர்னல் சமித் கார்க்கி, நிர்வாக அதிகாரி லெப்ட்னட் கர்னல் ஸ்ரீகாந்த் சோனா மெடல் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா பேசினர். துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், நடைபயிற்சி, வரைபடம் திறனாய்வு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை கல்லுாரி என்.சி.சி., அலுவலர் சுரேஷ்பாபு செய்து வருகிறார்.

