ADDED : ஜூலை 25, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள்புரம் பகுதியில் குளியல் தொட்டி அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
பெரிய முனியாண்டி கூறியதாவது: இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கிறோம். இறப்பு காலங்களில் மயானத்தில் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றில் குளிக்க வேண்டும்.
வெள்ள காலத்தில் ஆற்றில் அதிகளவு நீர் செல்லும்போது குளிக்க முடியாது. வறட்சி காலத்திலும் ஆற்றில் தண்ணீர் இன்றி சிரமம் உள்ளது. இங்குள்ள அரசு நிலத்தில் குளியல் தொட்டி அமைக்கும்படி அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.