ADDED : ஆக 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நடந்தது.
காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த இத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 1366 பேர் பங்கேற்றனர். மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, மதுரை காமராஜ் பல்கலை, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, லதா மாதவன் பொறியியற் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, செந்தாமரை கலை அறிவியல் கல்லுாரியில் 2 மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நடந்தது.
