ADDED : அக் 21, 2025 05:03 AM
மதுரை: தீபாவளி முடிந்து பயணிகள் சென்னை திரும்ப வசதியாக திருநெல்வேலி -- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை (அக். 22) இரவு 11:55 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06166), மறுநாள் காலை 10:55 மணிக்கு எழும்பூர் செல்லும். மறுமார்க்கத்தில் அக். 23 மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06165), மறுநாள் அதிகாலை 12:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு துவங்கியது.