ADDED : பிப் 01, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : ஹிந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணைக் கமிஷனராக இருந்த செல்லத்துரை நேற்று கூடுதல் பொறுப்பாக கள்ளழகர் கோயில் துணைக்கமிஷனராக பொறுப்பேற்றார். இவரிடம் முன்னாள் துணைக்கமிஷனர் ராமசாமி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முன்னதாக பணியாளர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. இதில் கோயில் பட்டாச்சாரியார்கள் சார்பில் ராமசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது.