sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கலைஞர் நுாலகத்தில் புதிய கட்டுமான திட்டம் கை நழுவுகிறது: கடந்தாண்டு ரூ.10.17 கோடிக்கு ஒப்புதலானது

/

கலைஞர் நுாலகத்தில் புதிய கட்டுமான திட்டம் கை நழுவுகிறது: கடந்தாண்டு ரூ.10.17 கோடிக்கு ஒப்புதலானது

கலைஞர் நுாலகத்தில் புதிய கட்டுமான திட்டம் கை நழுவுகிறது: கடந்தாண்டு ரூ.10.17 கோடிக்கு ஒப்புதலானது

கலைஞர் நுாலகத்தில் புதிய கட்டுமான திட்டம் கை நழுவுகிறது: கடந்தாண்டு ரூ.10.17 கோடிக்கு ஒப்புதலானது

2


ADDED : மே 20, 2025 01:03 AM

Google News

ADDED : மே 20, 2025 01:03 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்நுாலகத்தில் வீட்டில் இருந்து புத்தகங்களை கொண்டு வருபவர்களுக்கு அனுமதியில்லை. இவர்களுக்காக 110 பேர் அமரும்தனியறை உள்ளது. கழிப்பறை, குடிநீருக்கு மட்டும் நுாலகத்தை பயன்படுத்த முடியும். தினமும் 300 பேர் வரை சொந்த புத்தகங்களுடன் இங்கு வந்து படிக்கின்றனர்.

தனியறையில் இடமில்லாததால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட உணவறையில் படிக்கின்றனர். அங்கும் 60 பேர் வரை அமர முடியும். மழை பெய்யும் போது சாரல் வீசுவதால் புத்தகங்கள் நனைகின்றன.

எனவே ரூ.10.17 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட 2024 மார்ச்சில் திட்டமிடப்பட்டது.

கனவாக மாறிய திட்டம்


நுாலக வளாகத்தில் தரைத்தளத்தில் 3821 சதுர அடியில் 32 பேர் அமரும்இடம், 85 பேர் உணவருந்தும் டைனிங் ஹால், புத்தக விற்பனை நிலையங்கள், முதல், 2வது தளங்களில் தலா 90 பேர் அமரும் வகையில் மொத்தம் 11 ஆயிரத்து 463 சதுர அடியில் கட்ட திட்டமதிப்பீடு ரூ.10.17 கோடிக்கு தயாரிக்கப்பட்டு பொது நுாலக இயக்குநரகத்திற்கும், சென்னை முதன்மை தலைமை பொறியாளருக்கும் அனுப்பப்பட்டது.

நுாலகத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றார்.

தற்போது இத்திட்டம் கைவிடப்படும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளம் தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பிற்காக புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் முதல்வர் ஸ்டாலின், தனது கனவு நுாலகமான கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் புதிய கட்டுமானத்தை துவங்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us