ADDED : பிப் 18, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12:00 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள், அர்ச்சனை நடந்தன.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சொக்கையா சுவாமி மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார்.

