ADDED : ஜன 15, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுார், : மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணி புரிந்த சிவபிரசாத் தேனி மாவட்டஎஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி எஸ்.பி., பிரவின் உமேஷ் டோங்க்ரே மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிரா மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த பிரவின் உமேஷ் டோங்கரே கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று 2018, டிசம்பரில் திருச்சி திருவெறும்பூரில் உதவி எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கவர்னரின் தனிப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர், எஸ்.பி.யாக பணிபுரிந்து, 2021 ஜூனில் தேனி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.