/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டியில் புதிய சேமிப்பு கிடங்கு
/
உசிலம்பட்டியில் புதிய சேமிப்பு கிடங்கு
ADDED : ஆக 23, 2025 05:01 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ரூ. 5.50 கோடியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக்கிடங்கை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் சேமிப்புக்கிடங்கு இருக்கிறது. அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் குறுகிய தெருவழியாக சென்று திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சேமிப்புக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில் சீமானுாத்து கல்லுாத்து கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழாவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. அய்யப்பன், தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.