/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் புதிய டிரான்ஸ்பார்மர்
/
தினமலர் செய்தியால் புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : ஜூன் 29, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூர் மின்வாரிய அலுவலகம் மூலம் உலகுபிச்சம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.
மின் இணைப்புகள் அதிகரிப்பால் பற்றாக்குறையான மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. அதனால் மின் சாதன பொருட்களை உபயோகப்படுத்த முடியாததோடு பொருட்கள் பழுதாகின. மேலும் 'மின்சாரம் இருக்கு; ஆனா இல்லை' என்ற நிலை உருவானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.