/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் புதிய டிரான்ஸ்பார்மர்
/
தினமலர் செய்தியால் புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : அக் 19, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: குழிசேவல்பட்டியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய மின் மோட்டார்கள், குடியிருப்புகளின் இணைப்பை மின்ஊழியர்கள் துண்டித்து விட்டு தனியார் ஆயில் மில்லுக்கு மட்டும் இணைப்பு கொடுத்தனர்.
அதனால் பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக செயற்பொறியாளர் கண்ணன் ஏற்பாட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து விவசாயிகளுக்கு மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டது.