/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அக்டோபரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்.ஜி.ஓ., சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 02, 2025 06:09 AM
மதுரை: 'அக்டோபர் முதல்வாரத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்' என, என்.ஜி.ஓ.,சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் (என்.ஜி.ஓ., சங்கம்) மாநில மைய மத்திய செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
மாநில தலைவர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். சங்கத்தின் புதிய மாநில பொதுச் செயலாளராக தேசிங்குராஜன், பொருளாளராக பத்மினி மில்லர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், அரசு அறிவித்தபடி அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் துரைப்பாண்டி தலைமையிலான அரசு அலுவலர் ஒன்றியமே அரசால் அங்கீகரிக்கப்பட்டது. முரண்பட்ட அமைப்புகளோடு தொடர்புடையவர்கள் நடத்தி வரும் இயக்கத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
அறிவித்த காப்பீடு திட்டத்தை தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்குமானது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமனத்தில் எந்தவித நீக்குப் போக்குமின்றி அனைத்து நிலையிலும் பணியின்போது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குழந்தைகள் பயனடையும் வகையில் அறிவிக்க வேண்டும்.
இதில் எந்தவித நிபந்தனைகளும் விதிக்கக் கூடாது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.