sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி: ஆதினம்

/

பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி: ஆதினம்

பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி: ஆதினம்

பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி: ஆதினம்


ADDED : பிப் 28, 2024 05:09 AM

Google News

ADDED : பிப் 28, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு தரிசனம் செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் மடத்தின் முன் நின்றுகொண்டிருந்த ஆதினத்தை பார்த்து காரை நிறுத்தி நலம் விசாரித்தார். மோடிக்கு ஆதினம் சால்வை அணிவித்தார்.

ஆதினம் கூறியதாவது: நலமுடன் உள்ளீர்களா என பிரதமர் கேட்டார். அடுத்த முறையும் நீங்கள்தான் நிச்சயம் பிரதமராவீரகள் என வாழ்த்து தெரிவித்தேன். அவருக்கு என் ஆதரவு, ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு. பிரதமருக்கு ஆதரவளிப்பதால் எனக்கு எந்த பயமும் கிடையாது.

பாதுகாப்பு கருதி என்னை போலீசார் தடுத்தனர். அதையும் மீறி என்னை பிரதமர் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. மோடிக்கு சால்வை அணிவித்தபோது, 'கச்சத்தீவை மீட்க, இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை வைத்தேன். நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஆன்மிகவாதியாக பிரதமர் இருப்பது நாட்டிற்கு நல்லது என்றார்.






      Dinamalar
      Follow us