ADDED : ஆக 28, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்,: டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10.30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் மக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
பேரையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். பணி முடிந்து திரும்பிச் செல்ல டி.கல்லுப்பட்டி வரை இரவு முழுவதும் பஸ் வசதி உள்ளது. ஆனால் டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10:30 மணிக்கு கடைசி பஸ் இயக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் பேரையூருக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பேரையூரைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் இரவில் பஸ் இல்லாமல் தவிக்கின்றனர். கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இரவில் பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.