ADDED : ஆக 31, 2025 04:56 AM
மதுரை: மதுரையை துாய்மை நகரமாக்கிட மாநகராட்சி 'எழில் கூடல்' எனும் சிறப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் கோயில்கள், பஸ் ஸ்டாண்ட்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் எழில் கூடல் சிறப்பு துாய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக நேற்று இரவு 10:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகள், பெரியார் பஸ் ஸ்டாண்ட், விளக்குத்துாண், காமராஜர் சிலை,மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 64 இடங்களில் ஒரே நேரத்தில் துாய்மைப் பணி நடந்தது. மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
மேயர் இந்திராணி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, நகர்நல அலுவலர் இந்திரா, பி.ஆர்.ஓ.,மகேஸ்வரன், கவுன்சிலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

