sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை துவக்கம்

/

மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை துவக்கம்

மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை துவக்கம்

மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை துவக்கம்


ADDED : டிச 21, 2024 08:07 AM

Google News

ADDED : டிச 21, 2024 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம், : மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று முதல் இரவு நேர விமான சேவை துவங்கியது.

விமான நிலையத்தில் அக்., 1 முதல் 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமானம் நேற்று முதல் இரவு நேர சேவையை துவக்கியது.

இயக்குனர் முத்துக்குமார், பொது மேலாளர் ஜானகிராமன், இண்டிகோ விமான நிறுவன மேலாளர் மோகனா ஆனந்த், பணியாளர்கள் கேக் வெட்டி இரவு நேர சேவையை துவக்கினர். சென்னையிலிருந்து 78 பயணிகளுடன் மதுரை வந்த இரவுநேர இண்டிகோ விமானம் மதுரையிலிருந்து 43 பயணிகளுடன் நேற்றிரவு 10:45 மணிக்கு சென்னை சென்றது.

இதுவரை சென்னைக்கு தினம் இரவு 9:05 மணிக்கு கடைசி விமானம் சென்றது.

இனி தினமும் இரவு 10:45 மணிக்கு மதுரையிலிருந்து இரவு நேர சேவையாக இண்டிகோ விமானம் புறப்பட்டு செல்லும்.






      Dinamalar
      Follow us