ADDED : ஜூன் 10, 2025 01:34 AM

பாலமேடு: பாலமேடு பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள்வராததால் தனியார் வாகனங்கள் 'பார்க்கிங்' இடமாக மாறி வருகிறது.
இந்த பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வந்து செல்ல 3 வழிகள் உள்ளன. மதுரையில் இருந்து பாலமேடு வழியாக வலையபட்டி, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்து செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வருவதில்லை மெயின் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர்.
இதனால் நெருக்கடியான இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்களும் காத்திருக்கும் சூழல் உள்ளது. வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
மேலும் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் வெயில் மழையில் கடை வாசல்களில் காத்திருக்கின்றனர்.
இருக்கை வசதி செய்யவும் பஸ்கள் வந்து செல்லவும் பேரூராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.