sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

/

 தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

 தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

 தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பேச்சு


ADDED : மார் 18, 2026 05:23 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: '' ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் எந்த நன்மையும் தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை. காவல்துறை ஈரல் புரையோடிவிட்டது. ஏவல் துறையாகிவிட்டது. ஒரு டி.ஜி.பி.,யை கூட நியமிக்க முடியாத தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'' என மதுரையில் நடந்த அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டியும், தி.மு.க., அரசை கண்டித்தும் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், ''இந்த ஆர்ப்பாட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்'' என்றார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசுகையில், ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதும் ஆர்ப்பாட்டம் இது. மதுரையைச் சுற்றி 'லாக்கப்' மரணங்கள் நிகழ்ந்துள்ளன'' என்றார்.

நகர் செயலாளர் செல்லுார் ராஜூ பேசுகையில்,நாள்தோறும் தமிழ்நாட்டில் அவலங்கள் நடக்கின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும் அரசு ஊழியர்கள் இனி ஸ்டாலின் வரவே கூடாது என அவர் படத்தை மகிழ்ச்சியோடு அப்புறப் படுத்தினர்.

விளம்பரத்தில் தி.மு.க.,வை மிஞ்ச முடியாது. தே.ஜ., கூட்டணியின் நோக்கம் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவது தான். மீண்டும் கோட்டை பக்கமே தி.மு.க., வரக்கூடாது என்றார்.

தலைமை வகித்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என 5 ஆண்டுகளாக முயற்சி நடந்து வருகிறது. டாஸ்மாக், மணல் கொள்ளையில் தி.மு.க., குடும்பம் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி கூறுகிறார். ஆனால் தி.மு.க., அரசு மறுக்கிறது. 5 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் எந்த நன்மையும் தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை.

5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8900 கொலைகள் நடந்துள்ளன. இதில் பெண்கள் 1977 பேர், குழந்தைகள் 361 பேர். 38 இளம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஈரல் புரையோடிவிட்டது. ஏவல் துறையாகிவிட்டது. ஒரு டி.ஜி.பி.,யைக் கூட நியமிக்க முடியாத தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

பா.ஜ., மாரிசக்கரவர்த்தி, அ.ம.மு.க., டேவிட் அண்ணாதுரை, த.மா.கா., ராஜாங்கம், ராஜேந்திரன், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ். சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, இளைஞரணி துணை செயலாளர் ஜெயபால், எஸ்ஸார் கோபி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us