ADDED : ஆக 18, 2025 03:02 AM

சோழவந்தான் சோழவந்தான் அருகே மேலப்பெருமாள்பட்டி விலக்கில் இருந்து சக்கரப்ப நாயக்கனுாருக்கு செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
அப்பகுதி ராமச்சந்திரன் கூறியதாவது:
சுற்றுவட்டார கிராமங்களுக்கு மையப் பகுதி சக்கரப்ப நாயக்கனுார். சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், நுாலகம், பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. சுற்றுவட்டார 6 கிராம மக்களும் அடிக்கடி வந்து செல்வர். போதுமான பஸ் வசதி இல்லாததால் மக்கள் மேலப்பெருமாள்பட்டி பிரிவில் இருந்து சக்கரப்ப நாயக்கனுாருக்கு நடந்து செல்கின்றனர்.
இப்பாதையில் தெருவிளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் கும்மிருட்டாக உள்ளது. இதனால் மக்கள் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள், விஷ ஜந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
இரவில் பெண்கள் தனியாகச் செல்ல முடியவில்லை. இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களை கேலி செய்தல், மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
வழிப்பறி, திருட்டு பயம் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

