sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரிசி, கேழ்வரகு மாவிற்கு இனி 'அக்மார்க்'

/

அரிசி, கேழ்வரகு மாவிற்கு இனி 'அக்மார்க்'

அரிசி, கேழ்வரகு மாவிற்கு இனி 'அக்மார்க்'

அரிசி, கேழ்வரகு மாவிற்கு இனி 'அக்மார்க்'


ADDED : ஏப் 23, 2025 04:00 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அரிசி மாவு, கேழ்வரகு மாவிற்கான 'அக்மார்க்' அங்கீகாரத்தை மத்திய அரசு முதன்முறையாக வழங்கியுள்ள நிலையில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

1937ம் ஆண்டு உணவுப்பொருட்கள் தரநிர்ணயச் சட்டத்தின்படி இதுவரை 248 உணவுபொருட்களுக்கு தரநிர்ணயம் செய்யப்பட்டு 'அக்மார்க்' தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் கோதுமை மாவு, கடலைமாவு உட்பட பல்வேறு மாவு வகைகள், உணவுப்பொருட்களுக்கு 'அக்மார்க்' தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் அரிசிமாவு, கேழ்வரகு மாவிற்கு 'அக்மார்க்' வழங்கக் கோரி உணவுப்பொருள் தயாரிப்பாளர்களின் பல ஆண்டு கோரிக்கையை அடுத்து தற்போது இரண்டுக்கும் தரச்சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது:

சமீபத்தில் அரிசிமாவு, கேழ்வரகு மாவு, உளுந்துமாவு, பார்லி மாவு, மக்காசோள மாவு, கொழுப்புச்சத்துள்ள சோயாமாவு ஆகியவற்றிற்கும் தரநிர்ணயம் செய்யப்பட்டு 'அக்மார்க்' முத்திரை வழங்கப்படுகிறது. ஏற்கனவே கோதுமை மாவு, கடலை மாவு தயாரிப்பாளர்கள் அரிசிமாவு, கேழ்வரகு மாவை தயாரித்து விற்கின்றனர். இந்த இரண்டுக்கும் கூடுதலாக உரிமம் பெறலாம்.

அரிசிமாவு, கேழ்வரகு மட்டும் தயாரிப்பவர்கள் புதிதாக 'அக்மார்க்' தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். மதுரை கே.கே. நகர் 80 அடி ரோட்டில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு 'அக்மார்க்' தரம் பிரிப்பு ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

தயாரிப்பாளர்கள் மாவு வகைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெறலாம் என்றார். அலைபேசி: 96292 88369.






      Dinamalar
      Follow us