/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தரைப்பாலம் இடிந்தும் கண்டுகொள்ள ஆளில்லை
/
தரைப்பாலம் இடிந்தும் கண்டுகொள்ள ஆளில்லை
ADDED : டிச 23, 2024 05:19 AM

திருநகர்: மதுரை விளாச்சேரியில் தரைப்பாலம் இடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் புதிதாக பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
விளாச்சேரி கண்மாயில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதியில் தெற்கு முஸ்லிம் தெரு ரேஷன் கடை அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. சீனிவாசா காலனி நான்கு வழிச்சாலை, அண்ணா பல்கலை செல்வோரும், அப்பகுதிகளில் இருந்து சவுராஷ்டிரா, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பள்ளிகளுக்கு செல்வோரும் இந்த பாலத்தை கடந்துதான் சென்றனர்.
அந்த தரைப்பாலம் 3 மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அங்கு புதிய பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் இல்லை. கால்வாயில் தற்போது மக்கள் நடந்து செல்ல வசதியாக, ஊராட்சி சார்பில் தற்காலிகமாக மரப்பாலம் அமைத்துள்ளனர். வாகனங்களில் செல்வோர் ஊருக்குள் சென்று வர வேண்டி உள்ளது.
விரைவில் தரைப்பாலம் அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

