/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேதமடைந்த மறுகாலை சீண்டுவாரில்லையே
/
சேதமடைந்த மறுகாலை சீண்டுவாரில்லையே
ADDED : ஜூன் 04, 2025 01:24 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்து சீண்டுவாரின்றி கிடக்கும் மறுகால் வாய்க்கால், நீர் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பரங்குன்றம் பாணாங்குளம் கண்மாய் வைகை அணை நீரால் நிரம்பும். அக்கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் நிலையூர் பெரிய கண்மாய்க்கு செல்லும். பாணாங்குளம் கண்மாயில் இருந்து நிலையூர் பெரிய கண்மாய் வரையான மறுகால் வாய்க்காலில், நிலையூர் ரோடு பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
அப்பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை. மறுகால் வாய்க்கால் முழுவதும் இருபுறமும் சிமென்ட் தடுப்புச் சுவர் கட்டப்பட வேண்டும். வைகை அணையில் தண்ணீர் திறப்பதற்குள் இந்த மறுகால் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.