/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டாஸ்மாக் கடை இடமாற்றம் இல்லை' உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
'டாஸ்மாக் கடை இடமாற்றம் இல்லை' உயர்நீதிமன்றத்தில் தகவல்
'டாஸ்மாக் கடை இடமாற்றம் இல்லை' உயர்நீதிமன்றத்தில் தகவல்
'டாஸ்மாக் கடை இடமாற்றம் இல்லை' உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூலை 08, 2025 01:44 AM
மதுரை: மதுரை நிலையூர் மேகலா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை வடிவேல்கரையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய உள்ளனர்.
அருகில் குடியிருப்புகள், பள்ளி அமைந்துள்ளன. மது அருந்துவோரால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கடையை நிலையூருக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜீவா ஆஜரானார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்,'டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது,' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.