நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: வடக்குநாவினிபட்டி மூங்கில் மேட்டில் முத்துப்பிள்ளை அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் மரு ளாடி எனும் பெண் சாமியாடி, அம்மனுக்குரிய பூஜை பொருட்களை பெட்டியில் சுமந்து முன்னே நடந்து செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்தனர்.
நேற்று சுவாமி முன்பு தரையில் பரப்பப்பட்டிருந்த மல்லிகை பூ மீது மருளாடி நாகம்போல் ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதைதொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பலி கொடுக்கப்பட்டு பொங்கல் வைத்து படையிலிட்டனர். பிறகு சமத்துவ அசைவ அன்னதானம் நடந்தது.

