UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் காந்தி ஜெயந்தி அகிம்சை தினமாக கடைபிடிக்கப்பட்டது.
அமைதி, நல்லிணக்கம், மனிதநேயத்தை வலியுறுத்தி தமிழகத்தில் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த முத்தண்ணா, அமைதி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை வந்த அவர், நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களிடம் தேசபக்தி குறித்து பேசினார். பள்ளி முதல்வர் மனோஜ்குமார் பாலிவால், துணை முதல்வர் ராம்குமார், உடற்பயிற்சி ஆசிரியர் மலைச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். நேதாஜி சுவாமிநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
