
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் மில்கேட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாடுகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கிய ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்னர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலுார் வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை 24 முதல் 27 வார்டு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

