ADDED : செப் 08, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியில் நொண்டிதாதன் விளையாட்டு குழு, நேதாஜி மக்கள் இயக்கம் மற்றும் முத்தாலம்மன் கோயில் காளை நினைவுக்குழு சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 18 காளைகள், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். கிராம மரியாதை காளையை தொடர்ந்து வடத்தில் பூட்டப்பட்ட ஒரு காளைக்கு 20 நிமிடமும், அதனை அடக்க 9 வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர்.
சில மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் மாலை, வேட்டி, குத்து விளக்கு வழங்கி மரியாதை செய்யப்பட்டது. வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு ரொக்க பணம், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.