/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர்களாக வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்
/
வாக்காளர்களாக வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்
வாக்காளர்களாக வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்
வாக்காளர்களாக வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்
ADDED : ஆக 07, 2025 05:31 AM
அவனியாபுரம் : வடமாநிலத்தில் இருப்பவர்களை தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஊழல் என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: வடமாநிலத்தில் இருப்பவர்களை தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இது தவறான செயல். மிகப்பெரிய ஊழல். மேற்கு வங்கத்தை போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 7 லட்சம் பேர் இல்லை எத்தனை பேரை சேர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் இங்கு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
தேர்தலுக்கு எட்டு மாத காலங்கள் உள்ள நிலையில் மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும். திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ., வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. டி.ஜி.பி. அளவில் உள்ளவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உள்ளது. எஸ்.ஐ., கொலை செய்யப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் நடத்தவில்லை என்பதுதான் வருத்தம். இந்த ஆட்சி மோசமான ஆட்சியாக உள்ளது என்றார்.
ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் தேவை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று முதலில் சட்டசபையில் நான் தான் வலியுறுத்தினேன். தற்போது தான் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதற்கு தனிச்சட்டம் தேவையில்லை என முதல்வர் கூறினார்.
தமிழக மருத்துவமனைகளில் நாய்க்கடி பாம்பு கடிக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது. டாக்டர்கள் காலி பணியிடங்களும் உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகும் நிலை உள்ளது என்றார்.