/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு நயா பைசா கூட ஒதுக்கவில்லை; துாய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் பேச்சு

ADDED : அக் 26, 2025 04:49 AM

திருமங்கலம்: ''துாய்மைப் பணியாளர் நலவாரியத்திற்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு நயா பைசா கூட ஒதுக்கவில்லை. தற்போது தி.மு.க., ஆட்சியில் ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என அதன் தலைவர் ஆறுச்சாமி கூறினார்.
செக்கானுாரணி கேரன் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஆறுச்சாமி பேசியதாவது:
சென்னையில் துாய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரிக்குள் அனைத்து மாவட்டங் களிலும் இத்திட்டத்தை முதல்வர் விரிவுபடுத்தி அறிவிப்பார். இந்த வாரியத்தில் 3.20 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர்.
வாரியத்திற்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு நயா பைசா கூட ஒதுக்கவில்லை. தற்போது தி.மு.க., ஆட்சியில் ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.4.37 கோடி நலவாரிய உறுப்பினருக்கு நலத்திட்டங்கள் வழங்க செலவிடப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள், கையுறைகள் வழங்கப்படும்.
நலவாரிய அட்டைகள் தற்போது சென்னையில் மட்டுமே அச்சடிக்கப்படுவதால் உறுப்பினர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மாவட்ட அளவில் அட்டைகள் அச்சிட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்