ADDED : ஆக 11, 2025 04:30 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் இ.பி.எப்., (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) தொகை செலுத்த தாமதம் ஏற்பட்டதால் அபராதம் விதித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லுாரியில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர் உட்பட 91 பேருக்கு 2019 முதல் 2025 வரை வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை. தாமதமாக செலுத்தப்பட்டதால் அபராதம் செலுத்த வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கல்லுாரி வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து முதல்வர் ஜார்ஜ் கூறுகையில், 'நான் பொறுப்பு ஏற்பதற்கு முன் நடந்த நிகழ்வு இது. நோட்டீஸூக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை ரூ.21 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றார்.