நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சார்பில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ்க்கூடல், 50 வது நுால் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். தமிழ்ச்சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.
'சிறுகதை வாசிப்பும் சமூகமும்' எனும் தலைப்பில் மதுரை பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் நேரு பேசினார். தனலட்சுமியின் திருநள்ளாறு தல வரலாறு, இளங்குமரனின் தமிழ்-செம்மொழித் தகுதி வரலாறு, கவிதாகுமாரின் மழையில் மீன் பார்க்கிறது பூனை, செந்தில்குமாரின் ஒத்தவீடு ஆகிய நுால்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தேன்மொழி, காளிதாஸ், பாண்டிச்செல்வி, முரளி ஆகியோர் நுாலை திறனாய்வு செய்தனர். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

