ADDED : ஜூன் 29, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மீனாட்சி அரசு கல்லுாரி சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு, நுால் அரங்கேற்றம் நடந்தது.
ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். கவிஞர் சுரதாவின் அமுதும் தேனும் என்ற தலைப்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் பேசினார்.
முனியசாமியின் விறகுவண்டி முதல் விமானம்வரை, லட்சுமி குமரேசனின் நிலாச்சோறு, வி.வெ. யின் வானவில்லுக்கு ஒன்பது நிறம், சங்கீத்ராதாவின் ஆழ்வார்களும் அவதாரங்களும் நுால்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
சாந்தாராம், வினோத், மகாலட்சுமி, கவிதா நுால் மதிப்புரை வழங்கினர். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.