/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொக்கு கூட்டத்தால் நாற்றங்கால் சேதம்
/
கொக்கு கூட்டத்தால் நாற்றங்கால் சேதம்
ADDED : நவ 16, 2025 04:12 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா சேடப்பட்டியில் நெல் சாகுபடிக்கான நாற்றங்காலில் இரை தேடும் கொக்குகள் கூட்டமாக இரை தேடுவதால் நாற்றுகள் சேதம் அடைவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நாற்றங்கால் அமைத்துள்ளனர். இப்பகுதியில் நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. சில விவசாயிகள் நடவு பணியை முடித்தும் உள்ளனர்.
நாற்றங்காலில் கொக்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இரை தேடி வருகிறது. நெல் நாற்றுகள் உரமாக இடப்படும் புண்ணாக்குகளில் புழுக்கள் உருவாகும். அவற்றை உண்ண கொக்குகள் நாற்றங்காலில் அமர்கின்றன. இதனால் நாற்றுகளும் சேதம் அடைகின்றன. நடவு வயல்களிலும் கொக்குக் கூட்டங்கள் முகாமிடுவதால் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

