ADDED : நவ 16, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேனி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர், விதிகளுக்கு புறம்பாக ஜாதி பெயரில் துறை சாராத சங்கம் துவக்கியுள்ளார். சட்டவிரோதமாக பணம் வசூலித்து சொத்துக்கள் வாங்கியுள்ளார். சங்கத்தை கலைக்க வேண்டும்.
சொத்துக்களை அரசுடமையாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு தமிழக பதிவுத்துறை முதன்மை செயலர், ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

