நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நேற்று நடந்தது.
மூலவர்களின் சக்தி, புனித நீர் அடங்கிய குடத்தில் கலை இறக்கம் செய்யப்பட்டது. பின்பு அந்த சக்தி மூலவர்களின் உருவங்களாக வரையப்பட்ட வரைபடத்தில் கலை ஏற்றம் செய்யப்பட்டது. பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது.
அறநிலையத்துறை ஆய்வாளர் இளவரசி, கோயில் அறங்காவலர் ராஜேஷ், பொதுமக்கள் பங்கேற்றனர்.

