UPDATED : நவ 04, 2026 11:00 AM
ADDED : நவ 04, 2026 10:57 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு கிராம, நகர்ப்புற செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின்படி நேற்று மாநில அளவில் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை சுகாதார மையங்களில் கிராம செவிலியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். களப்பணியாளர்களுக்கு பழைய வருகைப்பதிவு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலை வர் பாண்டியம்மாள், பொருளாளர் சமுத்திரம், மாவட்ட செயலாளர் லாவண்யா, பொருளாளர் அன்னஜோதி பங்கேற்றனர்.
