ADDED : ஜன 24, 2025 04:47 AM

மதுரை: மதுரையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்டத் தலைவர் மேகலாதேவி தலைமை வகித்தார். செயலாளர் கலைச்செல்வி கோரிக்கைகளை விளக்கினார். 63 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்பை 6 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்த வேண்டும். பென்ஷன் தொகையை ரூ. 6,750 என உயர்த்த வேண்டும்.
பணி மூப்பு அடிப்படை, கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயலாளர் நுார்ஜஹான், ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பு பார்த்தசாரதி, செயற்குழு உறுப்பினர் ஒய்யம்மாள், மாவட்ட துணை தலைவர்கள் உமா மகேஸ்வரி, வீரம்மாள், உமாராணி, ஜெபமாலைராணி, சூரியபிரபா, மீனாட்சி, பொருளாளர் தமிழ்ச்செல்வி பங்கேற்றனர்.

