ADDED : அக் 11, 2025 04:25 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் சத்துணவு மையங்களுக்கு சிம்கார்டு வழங்குவதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் நூர்ஜஹான், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி, நிர்வாகிகள் போதுமணி, மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நான்கரை ஆண்டு காலத்தில் சத்துணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பாமல், இனி அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் நடத்த வேண்டும் என ஆண்ட்ராய்டு போன் இல்லாத சத்துணவு ஊழியர்களிடம் சிம்கார்டு மட்டும் வழங்கி விட்டு உடனடியாக ஆன்லைன் திட்டத்தை துவக்க வேண்டும் என்பதை நிறுத்திவிட்டு பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.
செல்லம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் நாகேஸ்வரி தலைமை வகித்தார்.
கோரிக்கை விளக்க வுரையை மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி, மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஆகியோர் பேசினர். பொருளாளர் அனிதா நன்றி கூறினார்.