sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஜன.20ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் சத்துணவு ஊழியர்கள் உறுதி

/

 ஜன.20ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் சத்துணவு ஊழியர்கள் உறுதி

 ஜன.20ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் சத்துணவு ஊழியர்கள் உறுதி

 ஜன.20ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் சத்துணவு ஊழியர்கள் உறுதி


ADDED : ஜன 14, 2026 06:49 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினர் ஜன. 20 ல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உறுதியேற்றனர்.

இதற்கான ஆயத்த மாநாடு மதுரையில் நடந்தது. மாவட்ட தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். செயலாளர் சந்திரபாண்டி, மாநில துணைத்தலைவர் ஸ்ரீரங்கநாதன், அனிதா, அய்யங்காளை, தமிழ், சந்திரன், சந்திரபோஸ் பேசினர்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்குதல், 63 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல், காலை சிற்றுண்டி திட்ட பணியை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கல் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.

அவர்கள் கூறுகையில், 'ஜாக்டோ - ஜியோ போன்று போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us